கொள்ளிடம் ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்பு
திருச்சி மார்ச் 25 திருவரங்கம் கொள்ளிடம் ஆறு பூசாரி மண்டபத்திற்கு எதிர்ப்புறத்தில் அழுகிய நிலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக திருவரங்கம் வெள்ளி திருமுத்தம் கிராம நிர்வாக அதிகாரி ஹரி கிருஷ்ணன் திருவரங்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கீதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது .மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா ?என்ற கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளிடம் ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்கப்பட்ட சம்பவம் திருவரங்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.