கஞ்சா விற்பனை செய்த மூதாட்டி குண்டர் சட்டத்தில் கைது

0 201
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 15  திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்றதாக திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட மூதாட்டி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்துஉள்ளது.  இது குறித்து திருச்சி எஸ்பி அலுவலக செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது

திருச்சி ராம்ஜிநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புங்கனூர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த மில் காலனி மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மனைவி தனலெட்சுமி ( 67) என்பவரை கடந்த மாதம் 19ம் தேதி திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தனலெட்சுமி மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி எஸ் பி த செ.செல்வநாகரத்தினம் பரிந்துரையின் பேரில் திருச்சிமாவட்ட ஆட்சியர் சரவணன் தடுப்பு காவல் ஆணை பிரபித்தார் அதன்படி திருவெறும்பூர் மதுவிலக்கு போலீசார் தனலட்சுமி மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அதற்குரிய நகலை தனலட்சுமி இடம் வழங்கினார்.

திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் தற்போதுவரை மொத்தம் 63 தடுப்புசட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என திருச்சி எஸ்பி அலுவலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.