பி.ஜே.பி.யின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையம் : தவ்ஹீத் ஜமாத் குற்றச்சாட்டு
திருச்சி, ஆக.4 பிஜேபியின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் துணைப் பொதுச் செயலாளர் திருச்சியில் பேட்டி.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி காஜாமலை பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில துணைப் பொதுச் செயலாளர் அப்துல்ரஹீம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் .
இளைஞர்களை நல்வழிப்படுத்தக்கூடிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது
ஒவ்வொரு முறையும் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வரும் பொழுது பூரண மதுவிலக்கு வரும் என்று கூறுகிறார்கள். ஆனால் பூரணமாகக் வருவதில்லை.
போதைக்கு அடிமையாக கூடியது இளைஞர்கள் அடுத்த கட்டமாக ஆபாச வளையல் சிக்கி அவர்களுடைய வாழ்க்கையும், பெண்களுடைய வாழ்க்கையும் தொடர்ச்சியாக சீரழிந்து வருகிறது. ஆளுகின்ற திமுக அரசு கஞ்சா போன்ற பொருட்களை தடை செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்.
கர்நாடக மாநிலம், தர்மஸ்தலாவில் நூற்றுக்கும் மேற்பட்ட இளம் சிறார்கள், பெண்கள் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது. கற்பழித்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த செய்திகள் வெளி உலகத்திற்கு வராமல் பல முயற்சிகளை பின்னணியில் இருந்து ஆர்.எஸ்.எஸ் போன்ற பாஜக கும்பல்கள் செய்து வருவதே நாம் பார்க்கின்றோம்.
தர்மஸ்தலா உடைய நிர்வாகிகள் ஏதோ ஒரு வகையில் பிஜேபியோடு இணக்கமாக இருக்கும் காரணத்தால் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது.
இந்தியாவில் இந்து மதத்தை நாங்கள் தான் பாதுகாப்பு என்று கூறுகின்றன, இது குறித்து தமிழக பாரதிய ஜனதா கட்சி வாய் திறக்காமல் இருப்பது ஏன்? இவர்கள் இந்து மதத்திற்கு மட்டுமல்ல மனித குலத்திற்கு விரோதமானவர்கள், எதிரிகள். மத்திய, மாநில அரசுகள் இதில் தலையிட்டு உரிய தீர்வை பெற்று தர வேண்டும்.
பஹல்காமில் 23 பேர் படுகொலை செய்யப்பட்ட பின்னர் கொலை வழக்கில் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. யாரையோ சுட்டு விட்டோம் என நாடகமாடுகின்ற காட்சியை பார்க்கிறோம். குற்றவாளிகள் தப்பிவிட்ட விஷயத்தில் பெரும் கவலை ஏற்படுத்த கூடியதாக உள்ளது.
பீகாரில் வரைவு வாக்காளர்கள் திட்டத்தின் படி 65லட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பல வழக்குகளில் தடை விதி தெரிந்தும் கூட தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் நீக்கப்பட்டுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரானவர்கள் குறி வைத்து நீக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி வந்துள்ளது.
தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் 6.5லட்சம் வாக்காளர்களை சேர்ப்பதற்கான சதி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறுக்கு வழியில் ஆட்சி பிடிப்பதற்கு வேலை செய்து வருகின்றனர். இந்திய, தமிழ் மக்களும் சேர்ந்து இரும்புக்கரம் கொண்டு எதிர்த்து நிற்போம்.
3.5சதவீத இட ஒதுக்கீட்டை 5சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என பல முறை கோரிக்கை வைத்தும் இதுவரை வழங்கவில்லை. இதை கடந்த தேர்தலில் வாக்குறுதியாக கொடுத்து தேர்தலுக்கு வந்த திமுக அரசு இன்று அளவுக்கு முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை உயர்த்தி தரவில்லை.
எனவே, எதிர்வரக்கூடிய தேர்தலில் உரிய முறையில் அங்கீகாரம் இஸ்லாமிய சமுதாயத்தில் இருந்து பெறவேண்டும் என்றால் திமுக இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்ற நிலை தான் தற்போது இருக்கின்றது.
குறிப்பாக தமிழகத்தின் அளவிலே வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது இரண்டு சதவீத ஓட்டுகள் தான் தமிழகத்தில் முஸ்லிம்கள் எட்டு சதவீதம் பேர் உள்ளனர் இதில் இரண்டு சதவீத ஓட்டு மாறினாலே திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சி அமையுமா என்பது கேள்விக்குறியாக ஒன்றாக மாறிவிடும். எனவே இட ஒதுக்கீட்டுக்கான பணிகளை செய்ய வேண்டும் இது இஸ்லாமிய மக்களுக்கு செய்யக்கூடிய நன்றி கடனாக இருக்கும். தேர்தல் ஆணையம் ஒரு பக்க சார்போடு நடைபெறுகிறது. தமிழக அரசு இதனை நீதிமன்ற மூலம் சந்திக்க வேண்டும்.
தமிழக மக்களின் மனநிலை என்பது வேறு வட இந்திய வாக்காளர்கள் மனநிலை என்பது வேறு. தமிழக மக்கள் பெரியாரின் சிந்தனையும் பகுத்தறிவின் சிந்தனையும் மதவாத சிந்தனைக்கு எதிராகவும் கொண்டவர்கள் தேசநலனில் அக்கறை கொண்டவர்கள் படித்த மக்கள் .
தமிழர்களுடைய மன நிலையிலிருந்து தமிழகத்தில் ஜெயிக்க முடியாத என்பதால் பிஜேபி பீகாரில் இருந்து தமிழகத்தில் ஆட்களை இறக்கி இருக்கிறது.
இதற்கு கைப்பாவையாக தேர்தல் ஆணையம் ஆகிவிட்டது என்கிற சூழ்நிலை இருக்கின்றது.
இதனை தமிழக அரசு உரிய முறையில் எதிர்கொள்ளும் என்று நம்புகிறோம்.
ஜெயலலிதா இருக்கும்பொழுது இட ஒதுக்கீட்டிற்கு ஆணை அமைத்தார்கள் இதனை அடுத்து வந்த திமுக அரசு கலைஞர் தலைமையில் இட ஒதுக்கீடு வழங்கினார்கள்.
சிறுபான்மை மக்களுக்கு செய்திருக்கின்றனர். ஆனால், அது போதுமானதாக இல்லை என்பதுதான் எங்களுடைய பார்வையாகும்.
எங்களுடைய ஜமாத்தை பொருத்தவரை இது ஒரு இயக்கம் தான் அரசியல் சார்புடைய அமைப்பு கிடையாது தேர்தலில் பங்கெடுப்பதும் கிடையாது.
ஜமாத் யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதை தெள்ளத் தெளிவாக சொல்வதன் மூலமாக தமிழர்கள் வாக்காளர் மத்தியில் இஸ்லாமிய சமுதாய வாக்காளர் மத்தியில் எங்களுடைய கருத்து வலுவாக பிரதிபலிக்கக்கூடிய அளிக்கக்கூடிய பல காலகட்டங்களில் தேர்தல் சந்தித்துள்ளது, அது போன்ற சூழலை எதிர்காலத்தில் பார்க்கலாம் என தெரிவித்தார்.