முசிறி தொகுதியில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்

0 334
Stalin trichy visit

முசிறி தொகுதியில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்
கோட்டாட்சியர் நேரில் பார்வையிட்ட ஆய்வு.

முசிறி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் சுருக்க முறை திருத்த முகாமில் 1820 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

முசிறி சட்டமன்ற தொகுதியில் அடங்கிய 260 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 1,820 விண்ணப்பங்கள் வாக்காளர்கள் இடமிருந்து பெறப்பட்டது. புதிய வாக்காளர் சேர்க்க 1,012படிவங்களும், வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க 35 விண்ணப்பங்களும், பெயர் நீக்கம் செய்ய 411 விண்ணப்பங்களும், முகவரி மாற்றம் செய்ய 362 விண்ணப்பங்கள் உட்பட 1,820 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. சிறப்பு முகாமினை முசிறி கோட்டாட்சியர் மாதவன், வட்டாட்சியர்கள் சண்முகப்பிரியா, ஞானமிர்தம், தேர்தல் துணை வட்டாட்சியர்கள் விஜய், தங்கவேல் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.