நவல்பட்டில் செல்போன் டவர் ஜெனரேட்டர் அறையில் மின்கசிவு : கண்டுபிடித்து அணைத்த தீயணைப்புத்துறையினர்

0 142
Stalin trichy visit

திருச்சி, டிச.29  திருவெறும்பூர் நவல்பட்டு சாலையில் உள்ள செல்போன் டவர் மின்சார அறையில் திடீர் மின் கசிவு ஏற்பட்டதை தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடித்து அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது

திருவெறும்பூர் நவல்பட்டு சாலையில் தனியார் காம்ப்ளக்ஸ்சில் தனியார் செல்போன் டவர் (ஏர்டெல்) உள்ளது. அந்த செல்போன் டவர் பகுதியிலிருந்து புகை மண்டலம் உருவானது இதநாள் அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக திருவெறும்பூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அந்த தனியார் காம்ப்ளசில் ஏரி செல்போன் டவர் அருகே சென்று பார்த்த பொழுது செல்போன் டவர் மின்சார அறையில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு புகை வந்தது தெரிய வந்தது.

அதன் அடிப்படையில் அதனை உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அனைத்தனர்

இது மாலை பொழுதில் தெரிந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுவே நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்டிருந்தால் அந்த வணிக வளாகத்தில் உள்ள பல்வேறு வணிக நிறுவனங்கள் எறிந்து சாம்பலாக ஆகிருக்கும் இதனால் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் ஆயிருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.