ரோட்டரி கிளப் சார்பில் “எழுச்சி 2023”..

0 85
voc

ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி சக்தி சார்பாக “எழுச்சி 2023” சிறப்பாக நடைபெற்றது. தங்கமயில் ஜூவல்லரி மற்றும் ஶ்ரீமத் ஆண்டவன் கல்லூரியுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த பலமுனை திறன் போட்டிகளில் 9 பள்ளிகளை சேர்ந்த 100 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். Rtn. பியாட்ரிஸ் வனஜா  வரவேற்புரை வழங்கினார். Dr. சொக்கலிங்கம், ஆர்த்தோ சர்ஜன் காவேரி மருத்துவமனை முதன்மை விருந்தினராக நிகழ்வை தொடங்கி வைத்தார்.  ஶ்ரீமத் ஆண்டவன் கல்லூரியின் முதல்வர் முனைவர். பிட்சைமணி கெளரவ விருந்தினராக பங்கேற்றார். மாணவ மாணவிகளுக்கு பேச்சு, வினாடி வினா, பட்டிமன்றம், பாடல் மற்றும் படம் வரைதல் போட்டிகள் நடத்தப்பட்டன.

சிறப்புப் பேச்சாளர்கள் Rtn. பாலசுப்ரமணி, Rtn. பெட்ரா எலிசபெத் குழந்தைகளை ஊக்குவித்தனர். பங்கேற்றவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது. மதியம் அதிர்ஷ்ட விளையாட்டுகள் நடத்தப்பட்டன. விழாவில் பிற ரோட்டரி கிளப் தலைவர்களும், Rtn. சீனிவாசன், டிஸ்டிரிக்ட் பப்ளிக் இமேஜ் தலைவரும், AG Rtn. ஹேமலதாவும் கலந்து கொண்டனர். விழாவை இறுதி செய்யும் நிகழ்வில், போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகளை ரோட்டரி டிஸ்ட்ரிக்ட் 3000 த்தின் முதன்மைப் பெண்மணி Rtn. மேகி ஜெரால்டு வழங்கினார்.

நிகழ்வில் பங்கேற்றதில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப் பட்ட ஶ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப்பள்ளி கேடயம் பெற்றது. முதன்மை விருந்தினர் Rtn. விஸ்வ நாராயணன், CAO, தங்கமயில் ஜூவல்லரி சிறப்புரை ஆற்றினார்.  Rtn. சசிகலா செல்வராஜ், செயலர் நன்றியுரை ஆற்ற விழா இனிதே நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை Rtn. தமீம் நிஷா, Rtn. கமர் ஜஹான், Rtn. சோஷன் செரியன் மற்றும் சக்தி உறுப்பினர்கள் சிறப்புற செய்து இருந்தனர்.

click the image to chat on whatsapp

click the image to chat on whatsapp

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!