அறிவியல் படைப்பு களை காட்சிப்படுத்துதல் நிகழ்ச்சி…
இந்த கண்காட்சியில் நாலந்தா வேளாண் கல்லூரி மாணவர்கள் பல்வேறு அறிவியல் படைப்பு களை காட்சிப்படுத்தி இருந்தனர். மேலும் அறிவியல் படைப்பு களுக்கு விளக்கமும் அளித்தனர்.
இதில் அவர்கள், ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை (integrated disease management), ஒருங்கிணைந்த பூச்சிகள் மேலாண்மை (integrated pest management), ஒருங்கிணைந்த தாவர ஊட்டச்சத்து (integrated plant nutrient management) விளக்கம் அளித்தனர். மேலும், பாரம்பரிய கரைசல்கள் மற்றும் பாரம்பரிய நெல் கிரகங்களை காட்சிக்கு வைத்தனர்.
பாரம்பரிய கரைசல்கள்
ஜீவாமிர்தம், பஞ்சகாவியம், ஐந்திலை கரைசல், 3 ஜி கரைசல், கலை மேலாண்மை கரைசல், மண்புழு ஊக்கி, மண்புழு குளியல் நீர், பழகாடி, குணபஜலம், தேமோர் கரைசல், முட்டை அமினோ அமிலம், மீன் அமினோ அமிலம், பாரம்பரிய நெல் ரகங்கள், கருப்பு கவனி, சீரக சம்பா, ஆத்தூர் கிச்சலி, குள்ள கார், மல்லிகைப்பூ சம்பா, பிள்ளை மிளகு, குளியடிசன், காட்டு குத்தலம், கொத்தமல்லி சம்பா, துளசி சம்பா, வாழைப்பூ சம்பா, மணி சம்பா மற்றும் பல.