பொன்னணியாறு அணைக்கு காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்

0 396
Stalin trichy visit

மணப்பாறை அருகே உள்ள பொன்னணியாறு அணைக்கு  காவிரி உபரி நீரை நீரேற்றம் செய்யும் திட்டத்தினை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பொன்னணியாறு மற்றும் கண்ணூத்து அணைகளுக்கு காவிரியில் உபரியாகச் சென்று கடலில் கலக்கும் நீரை மாயனூர் கதவணையில் இருந்து குழாய் மூலம் நீரேற்றம் செய்யும் நீரேற்று பாசன திட்டத்தினை நிறைவேற்ற வலியுறுத்தி ஒரு நாள் கவன ஈர்ப்பு அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மணியாரம்பட்டி டேம் நால்ரோடு என்ற இடத்தில் நடைபெறும் போராட்டத்தில் விவசாயசங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.