மணப்பாறையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

0 60
voc

மணப்பாறை மே 20 திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பொன்னணி ஆறு கண்ணூத்து அணைகளுக்கு மாயனூர் கதவணையில் இருந்து காவிரி உபரி நீரை குழாய் மூலம் நீரேற்றம் செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ளன பொன்னணி ஆறு அணை கடந்த 18 ஆண்டுகளாக நீர் வரத்து இல்லாமல் வறண்டு வருகிறது. மேலும் 51 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர் பகுதியானது தற்போது 21 அடி நீர்மட்டத்தில் இருந்து வரும் நிலையில் சுமார் 17 அடி வரை சேரும் சகதியுமாக காணப்படுகிறது . அணை முழுமையாக நீர் வரத்து இல்லாமல் அணையில் இருந்து விவசாயிகள் பாசனத்திற்கு நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு சுமார் 18 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் மாயனூர் கதவணையில் இருந்து கவிரி உபரி நீரை குழாய் வழி மூலம் அணைக்கு கொண்டு வரும் ஆய்வு திட்டம் கொண்டுவரப்பட்டு அவை கிடப்பில் உள்ளது. பொன்னணி ஆறு அணைக்கு நீர் வரத்து வரும் நிலையில் அவை மணப்பாறை வையம்பட்டி மட்டுமன்றி மருங்காபுரி பகுதியில் உள்ள கண்ணூத்து அணைக்கும் நீர்வரத்தை ஏற்படுத்தும் இவற்றின் மூலம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விலை நிலங்கள் நீர் பாசன வசதி பெறும் எனக் கூறப்படுகிறது .ஆகவே காவிரி உபரி நீர் மூலம் பொண்ணணி ஆறு மற்றும் கண்ணுத்து அணைகள் நீரேற்று இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கோரி டேம் 4 சாலை பகுதியில் பொண்னணி அணை பாசன பகுதி விவசாய சங்கம் மற்றும் பொதுமக்கள் உண்ணாவிரதத்தில் இருந்தனர்.55555555555

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!