ஏரி குளங்களை தூர்வாரக்கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

0 234
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களை தூர்வாரிடக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருவெறும்பூர் ஒன்றிய குழு விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவருள் ஒன்றிய குழு சார்பாக விவசாயிகளின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தின் கோரிக்கைகளாக கட்டளை வாய்க்கால் உய்யக்கொண்டான் வாய்க்கால் கிளி வாய்க்கால், கூத்தைப்பார் பெரியகுளம் கிருஷ்ணா சமுத்திரம் செம்மங்குளம் மற்றும் பாசன வாய்க்கால்களின் ஏரி மற்றும் குளங்களை தூர்வாரிட கோரியும், கடந்த ஆண்டு சம்பா மற்றும் குருவை சாகுபடி முழுவதுமாக பாதிக்கப்பட்டு இந்த ஆண்டு சாகுபடிக்கு வாய்ப்பு இல்லாத நிலையில் விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் பெறப்பட்ட விவசாய கடன் கட்ட முடியாமல் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் வேதனைப்படும் விவசாயிகளின் பயிர் கடன் வசூலில் நெருக்கடி கொடுக்காமல் பயிர் கடனை தள்ளுபடி செய்திடக் கோரியும், சென்ற ஆண்டு சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்து அதற்கான காப்பீட்டுத் தொகை பல விவசாயிகளுக்கு கிடைக்க பெறாமல் உள்ளது எனவே அரசு பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டுத் தொகை வழங்கிட கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவெறும்பூர் ஒன்றிய குழு விவசாயிகள் கண்டன கோஷங்கள் எழுப்பி திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு தலைவர் ரவிச்சந்திரன் துணைச் செயலாளர் ஆரோக்கியராஜ் துணைத்தலைவர் ஆனந்தராஜ் மற்றும் மாநில நிர்வாக குழு உறுப்பினர் அயிலை சிவசூரியன் ஆகியோர் பங்கேற்று கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.