கர்நாடகா வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

0 276
Stalin trichy visit

காவிரியில் தண்ணீர் திறக்க கோரி திருச்சியில் கர்நாடகா வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடகா மாதாமாதம் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய தண்ணீரை திறக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவுப்படி அணையில் 47 டிரம்சிதண்ணீர் கொள்ளளவு-வில் 41 டிஎம்சி தண்ணீர் உள்ளது, அதில் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய உடனடியாக கொடுக்க வேண்டும், 100 கனடி மழை பெய்தால் தமிழகத்திற்க்கு 40 கனடி வீதம் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று திருச்சி தில்லைநகரில் உள்ள கர்நாடகா வங்கியை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார் மாநில துணைத்தலைவர் மேகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் வங்கிய முன்பு விவசாயிகள் ஏராளமானவர்கள் படுத்து போராட்டம் நடத்தினார்கள் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது தகவல் அறிந்து வந்த தில்லைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 150 பேரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.