கர்நாடக அரசைக் கண்டித்து விவசாயிகள் நூதனப் போராட்டம்
திருச்சி, ஆக. 3 காவிரியில் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரை கர்நாடக அரசைக் கண்டித்து திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி காவிரியாற்று மணலில் கழுத்தளவு புதைந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியும், காவிரி நடுவர் மன்றம் உத்தர விட்டும் காவிரியில் தமிழகத்துக் குரிய தண்ணீரை வழங்காத கர்நா க்ஷடக அரசைக் கண்டித்தும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பிஅய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில், ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை, சத்திரம் பேருந்து நிலையம் இடையே புதிய காவிரிப் பாலத்தின் அருகில் காவிரி ஆற்றில் இறங்கி, அங்கிருந்த மணல் திட்டில் கழுத்தளவு புதைந்து கொண்டு, கழுத்தில் தூக்குக் கயிறை மாட்டியபடி போராட்டத் தில் ஈடுபட்டனர். இதில் திரளான விவசாயிகள் பங்கேற்று, காவிரி நீர் கிடைக்காததால் குறுவை சாகுபடி சரிவர மேற்கொள்ள முடியாத நிலையில்,சம்பா சாகுபடியும் கேள்விக் குறியாகியுள்ளதைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
இதையறிந்து அங்குச் சென்ற காவல்துறையினர் நடத்திய பேச் சுவார்த்தைக்குப் பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.