காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

0 316
Stalin trichy visit

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் காவிரியில் மாதாமாதம் தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் கூறியும், காவிரி மேலாண்மை ஆணையம் கூறியும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாமல் வஞ்சிக்கிறது. குறுவை பயிர் காய்கிறது. இதுவரை காவிரியில் கர்நாடக அரசு 60 டிஎம்சி தண்ணீர் திறந்து விட்டுருக்க வேண்டும். ஆனால், 6 டிஎம்சி தண்ணீர் கூட திறந்து விடவில்லை. அமைச்சர் துரைமுருகன் தண்ணீரை திறந்துவிட மத்திய அமைச்சரை கேட்டாலும் கூட, அதற்கு மத்திய அமைச்சர் கர்நாடகவிடம் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று கூறுவது உச்ச நீதிமன்ற உத்தரவையும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் கேவலபடுத்துவதாகும். மத்திய அமைச்சரின் அசிங்கமான பேச்சை கண்டித்து திருச்சி காவிரி ஆற்றில் அம்மாமண்டபம் பகுதியில் 10 அடி ஆழமுள்ள பகுதியில் இறங்கி தண்ணீரை தாண்டி, கழுத்தளவு மணலில் புதைந்து கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டம் நடத்தினார்கள். பின்னர் காவல்துறையும், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையும் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளை மீட்டு, கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றி வந்து சிந்தாமணி ஆண்டாள் வீதியில் உள்ள அன்னதான சத்திரத்தில் தங்க வைக்கபட்டுள்ளனர்..

Leave A Reply

Your email address will not be published.