திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நெடுங்கூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் அய்யங்கார் மகன் 59 வயதான குமார். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவருடைய மகன் 28 வயதான ராஜேஷ். டிப்ளமோ படித்துவிட்டு பெரம்பலூரில் உள்ள எம்ஆர்எப் கம்பெனியில் கடந்த 3 வருடமாக
வேலை செய்து வருகிறார். குமார் துறையூர் உள்ள தனது உறவினர் திருமணத்திற்காக கடந்த 13ம் தேதி காலை 5 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார். தற்போது வரை வீடு திரும்பவில்லை. இவரது குடும்பத்தினர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் தற்போது வரை இவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுகனூர் காவல் நிலையத்தில் அவரது மகன் ராஜேஷ் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாயமான குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.