உடல் அழுகிய நிலையில் பெண் பிணம்; யார் அவர்? போலீசார் விசாரணை
முசிறியில் சுடுகாடு துறை அருகே காவிரி ஆற்றங்கரை பகுதியில் சுமார் 25 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத இளம்பெண் சடலம் கிடப்பதாக காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றவர்கள் முசிறி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து முசிறி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது நீல நிற லெகின்ஸ் பேண்டும், ரோஸ் கலர் மேல் உடையும் அணிந்த நிலையில், முகம் சிதைந்து புழுக்கள் வைத்த நிலையில் இறந்து கிடந்தார்.
இதையடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிந்து இறந்து கிடந்தது பெண் யார், கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எங்கேனும் கொலை செய்து சடலத்தை இங்கு வந்து வீசி சென்றனரா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.