திருச்சி மாநகரில் நாளை காய்ச்சல் தடுப்பு முகாம்

0 176
Stalin trichy visit

திருச்சி, அக்.17  திருச்சி மாநகர பகுதிகளில் பருவமழை காலத்தில் ஏற்ப டும் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களில் இருந்து பொதுமக்களை காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடத்தப்பட்டு வரும் பொது காய்ச்சல் முகாம்களில் மக்கள் கலந்து கொண்டு தங்கள் உடல் நிலையை பரிசோதித்துக்கொள்ள மாநகராட்சி ஆணையர் சரவணன் அழைப்பு விடுத்துள்ளார்.
பருவமழை துவங்கிவிட்டால் டெங்கு, மலேரியா, விஷக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவும் வாய்ப் புகள் அதிகம். இதை தடுக்கும் முன் னெச்சசரிக்கை நடவடிக்கையாக மாநகர பகுதிகளில் பொதுகாய்ச்சல் முகாம்கள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி அந்தந்த பகுதி நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த முகாம்கள் முறையே காலை மற்றும் மாலை வேளைகளில் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி நாளை (அக்.18) காய்ச்சல் முகாம் நடை பெறும் இடங்களாவன: பீமநகர்- அண்ணா நகர், முத்துராஜா தெரு, பீரங்கி குளம்-சுண்ணாம்புகாரத்தெரு, வள்ளுவர் நகர், இ.பி.ரோடு-தென்றல் நகர், காந்திஜி நகர், எ.புதுர்-ஆர்எம் எஸ் காலனி, கேஆர்எஸ் நகர், காந்திபுரம்-வாத்துக்கார தெரு, சாலை ரோடு, இருதயபுரம்- பழைய கோவில், கீழப்படையாச்சி சத்துணவு மையம், காமராஜ் நகர்- நேதாஜி தெரு, எல்.ஐ.சி காலனி, காட்டூர்- ஜெகநாதபுரம், திடீர் நகர், மேலகல்கண்டார் கோட்டை-நாகம்மை வீதி படிப்பகம், நாகம்மை வீதி, பெரிய மிளகுபாறை, மாந்தோப்பு, கல்லுடைக்கும்பாறை, ராமலிங்கபுரம்-சாந்தா ஷீலா நகர், ஆதி நகர், ஸ்ரீரங்கம்-முத்து நகர், மேலுர் சாலை, சுப்ரமணியபுரம்- நேரு நகர், எல்.எஸ்.பி காலனி, தெப்பக் குளம்-பட்டவர்த் சாலை, ஆண்டாள் தெரு, தென்னுர்-மூலக்கொல்லை தெரு, மீன்காரத்தெரு, திருவெறும்பூர், இந்திரா நகர், காந்தி நகர், திருவா னைக்கோவில்- கீதாபுரம், மீனாட்சி நகர் மற்றும் உறையூர் தியாகராஜ நகர், ஏயூடி காலனி ஆகிய பகுதிக ளில் பொதுகாய்ச்சல் முகாம் நடைபெறும்.
பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு தங்கள் உடல்நிலை குறித்து பரிசோதனை பெய்துகொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார்.
.

Leave A Reply

Your email address will not be published.