திருச்சி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது
திருச்சி, அக்.17கம்பரசம் பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி இன்று (அக்.17) நடைபெற இருப்பதால், நாளை (அக்.18) ஒரு நாள் மட்டும் மாநகரின் குறிப்பிட்ட சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம்,பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையம் ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறப்படுகிறது.
இந்நிலையில் கம்பரசம்பேட்டைதுணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் இன்று (அக்.17) மேற்கொள்ளப்பட்டதால் கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம்மற்றும் அய்யாளம்மன் படித்துறை ஆகிய நீரேற்று நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான விறகுப் பேட்டை, மரக்கடை, மலைக்கோட்டை, சிந்தாமணி, உறையூர், பாத்திமா நகர்,புத்தூர்,மங்களம் நகர், செல்வா நகர், பாரதி நகர், சிவா நகர், புத்தூர், ஆனந்தம் நகர், ரெயின்போ நகர், தில்லைநகர், அண்ணாநகர், கண்டோன்மென்ட், காஜாபேட்டை,ஜங்ஷன், கருமண்டபம், ராமலிங்க நகர், உய்யாகொண்டான் மலை,விஸ்வாஸ்நகர், மிளகுபாறை, கல்லாங்காடு, சொசைட்டி காலனி , எம்.எம் நகர் மற்றும் தேவதானம், மகாலட்சுமி நகர், சங்கிலியாண்டபுரம்,கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை, ஜெகநாதபுரம், திருவெறும்பூர், வள்ளுவர் நகர், எல்லக்குடி, ஆலத்தூர், புகழ் நகர், காவேரி நகர், பாரி நகர், சந்தோஷ் நகர் மற்றும் கணேஷ் நகர் ஆகிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நாளை (அக்.18) ஒரு நாள் மட்டும் இருக்காது.
நாளை மறுநாள் (அக்.19) முதல் வழக்கம் போல்குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்கள் இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்துக்கொண்டு, மாநகராட்சிக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். என திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார்.