குணசீலத்தில் வீடு புகுந்து திருட முயற்சி-இளைஞர்கள் 2 பேர் கைது.

0 312
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே குணசீலத்தில் வீடு புகுந்து திருட முயற்சி செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

குணசீலம் மலையப்பர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் 55 வயதான சண்முகம். இவரது வீட்டில் இரண்டு இளைஞர்கள் கடந்த 17 ந்தேதி இரவு 10:00 மணி அளவில் திருட முயற்சி செய்து வீட்டின் உள்ளே சென்றுள்ளனர். அவர்களை கண்டதும் சண்முகம் அவர்களை பிடிக்க முயன்றார். ஆனால் அங்கிருந்து அவர்கள் தப்பி சென்றனர்.

இது குறித்து சண்முகம் வாத்தலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வாத்தலை போலீசார் விசாரணை செய்து வந்தனர்.விசாரணையில் சிறுகாம்பூர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான பிரதீப் மற்றும் குணசீலம் பகுதியை சேர்ந்த 18 வயதான சாஜன் ஆகியோர் என தெரியவந்தது. பின்னர் இருவரையும் வாத்தலை போலீசார் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.