ஐஸ் வியாபாரி வெட்டிக்கொலை – 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்த போலீசார்…

0 3,864
Stalin trichy visit

மணப்பாறை அருகே ஐஸ் வியாபாரியை வெட்டிக்கொலை செய்த ஆறு பேர் கைது.
சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்த போலீசார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கரும்புளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஐஸ் வியாபாரி குப்புசாமி (வயது 65). தற்போது குடும்பத்தினருடன் பொத்தமேட்டுப்பட்டியில் வசித்து வரும் இவர்  நேற்று காலை தனது மகன் மாரிமுத்து (வயது 25), மற்றும் மனைவி சீரங்கம்மாளுடன் கரும்புளிபட்டியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்று விட்டு திரும்பி வரும் வழியில் கலிங்கப்பட்டி பிரிவு என்ற இடத்தில் ஆறு பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியதில் குப்புசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயமடைந்த மாரிமுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மணப்பாறை போலீசார் தலைமறைவாக இருந்த கொலைக் குற்றவாளிகள் கரூர் மாவட்டம், தேவர்மலையைச் சேர்ந்த பிரவீன் (வயது 24), தேவா என்ற தேவேந்திரன் என்ற மனோஜ் (வயது 20), ஸ்டாலின் (வயது 21), கரும்புளிபட்டியைச் சேர்ந்த சந்ரூ (வயது 22), மணிகண்டன் (வயது 25), தினேஷ் (வயது 25) ஆகிய ஆறு பேரையும் கைது செய்தனர். சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.