உத்தமர் கோயிலில் வைகாசி தேரோட்ட விழாவை முன்னிட்டு கொடியேற்ற விழா

0 46
voc

உத்தமர் கோயிலில் வைகாசி தேரோட்ட விழாவை முன்னிட்டு கொடியேற்ற விழா நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள அருள்மிகு உத்தமர் கோயிலில் வைகாசி தேரோட்ட விழாவை முன்னிட்டு கொடியேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

108 திவ்ய தேசங்களில் மூன்றாவது திவ்யதேச ஸ்தலமாகும். திருமங்கையாழ்வரால் பாடல் பெற்றதும் 108 திருப்பதிகளில்  ஒன்றானதும் திருக்கரம்பனூர் ஆதிமாபுரம் பிச்சாண்டார்கோவில் என பிரசித்தி பெற்றதும்  மும்மூர்த்திகளும்,முப்பெரும் தேவிகளும் எழுந்தருளிய திருத்தலம் இந்தியாவிலேயே அருள்மிகு உத்தமர் கோயில்  ஒன்றே ஆகும்.

national admission
click the image to chat on whatsapp

click the image to chat on whatsapp

இந்நிலையில் உத்தமர் கோயிலில் வைகாசி தேரோட்ட விழாவை முன்னிட்டு கொடியேற்ற விழா நடைபெற்றது. முன்னதாக விநாயகர் பூஜை, எஜமானர் சங்கல்யம், புண்ணிய ஹவாஜனம், வாஸ்துசாந்தி,அங்குரார்பணம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து கொடிமரத்துக்கு பூஜைகள் நடைபெற்று நந்தி பெருமான் படம் தாங்கிய கொடியினை கொடி மரத்தில் ஏற்றினார். பின்னர் மகா தீபாதரனை நடைபெற்றது இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். முக்கிய நிகழ்வான வைகாசி தேரோட்ட விழா வருகின்ற ஜூன் மாதம் 2- ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தலைமையில் கோயில் பணியாளர்கள் கோயில் குருக்கள்கள், பக்தர்கள் செய்து வந்தனர்.

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!