துறையூரில் காவல்துறை சார்பாக கொடி அணிவகுப்பு பேரணி
திருச்சி மாவட்டம் துறையூரில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி காவல்துறை சார்பாக கொடி அணிவகுப்பு பேரணி நேற்று நடைபெற்றது.
துறையூர் முசிறி பிரிவு சாலையில் துவங்கிய இந்த பேரணியை திருச்சி ஏடிஎஸ்பி கோபாலசந்திரன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் முசிறி டிஎஸ்பி யாஸ்மின் துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தொட்டியம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் முசிறி இன்ஸ்பெக்டர் கதிரேசன் சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் முகமதுஜாபர் மன்னச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் ரகுராமன் உள்ளிட்ட அதிகாரிகளும் ஆயுதப்படை வீரர்கள் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் சட்டம் ஒழுங்கு காவலர்கள் உள்ளிட்டோர் ஆயுதம் ஏந்தி கொடி அணிவகுப்பாக சென்றனர். இந்த பேரணியானது முசிறி பிரிவு சாலையில் தொடங்கி திருச்சி சாலை காவல் நிலையம் வழியாக துறையூர் பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.