துரை வைகோவை ஆதரித்து அமைச்சர் கே. என். நேரு பிரச்சாரம்

0 222
Stalin trichy visit

திருச்சி, ஏப்.1 திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் துரைவைகோவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

திருச்சி மாநகராட்சி கிராப்பட்டி பகுதியில் அமைச்சர் கே.என்.நேரு வாக்குகள் சேகரித்து அமைச்சர் கே. என். நேரு பேசும்போது, இந்த பகுதியில் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது. எந்த பணிகள் செய்தாலும் இந்த பகுதியில் பணிகள் செய்வதில் எங்களுக்கு மகிழ்ச்சி. அதற்கு காரணம் உங்களுடைய ஆதரவை தொடர்ந்து எங்களுக்கு கொடுத்து வருகிறீர்கள். நாங்கள் கூட்டணி கட்சிக்கு எப்போதுமே விசுவாசமாகவும், நியாயமாகவும் இருந்து வருகிறோம். நாடாளுமன்ற தொகுதியில் தி. மு. க. தலைமை எந்த கட்சி வேட்பாளர்களை நிறுத்தினாலும் அவர்களுக்கு ஆதரவு கொடுத்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம். கடந்த முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருநாவுக்கரசர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது ம. தி. மு. க. சார்பில் துரை வைகோ போட்டியிடுகிறார். அவருக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மாவட்ட தி. மு. க. செயலாளர் வைரமணி, மேயர் அன்பழகன், , துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா, , மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு பொதுக்குழு உறுப்பினர் கிராப்பட்டி செல்வம், கவுன்சிலர் கவிதா செல்வம், பகுதி செயலாளர்கள் , விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அரிஸ்டோ ரவுண்டா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ம.தி.மு.க. தேர்தல் பணிமனையினை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.