பலத்த மழையால் ஊருக்குள் புகுந்த வெள்ளம்
திருச்சி மாவட்டம், துறையூரில் நேற்று காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் திடீரென்று மாலை 5 மணியளவில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை இரவு 7 மணிக்கு மேல் நீடித்தது இதனால் துறையூரை அடுத்துள்ள செல்லிபாளையத்தில் உள்ள ஆறாவது வார்டு விநாயகர் தெருவில் செல்லிபாளையம் ஏரி வழியாக வரும் மழை நீர் ஊருக்குள் புகுந்தது.
இதனால் செல்லி பாளையத்தில் உள்ள விநாயகர் தெருவில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் செல்லிபாளையம் ஏரியும் வாய்க்காலில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் விநாயகர் தெரு முழுவதும் நீரில் மூழ்கியது.