மணப்பாறை அருகே மலைக்குன்றில் காட்டுத் தீ

0 601
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 6  மணப்பாறை அருகே மலைக்குன்றில் பற்றி எரியும் காட்டுத்தீயை 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்த தீயணைப்புத் துறையினர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே துவரங்குறிச்சியை அடுத்த லிங்கம்பட்டியில் கிளாமரத்துக்குட்டு என்ற சிறு மலைக்குன்று உள்ளது. இப்பகுதியில் நேற்று பிற்பகல் காய்ந்த புற்கள் மற்றும் சருகுகளில் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. இதனையடுத்து மலையின் அடிவாரத்தில் குடியிருந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

மேலும் இப்பகுதியில் தீயணைப்பு வாகனம் மலைமேல் செல்ல முடியாததால் தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினர் மட்டும் மேலே சென்று அங்கு உள்ள செடி மற்றும் இலை தலைகளை வைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை அணைப்பது தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

இந்த மலைப்பகுதியில் வனவிலங்குகளான காட்டெருமை,‌ முயல், பாம்பு மற்றும் பறவை இனங்கள் வாழ்ந்து வருகின்றன. மேலும் இந்த மலைப்பகுதியில் கடந்த ஆண்டு இதேபோன்று சுமார் நான்கு முறைக்கு மேல் தீப்பற்றி எரிந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.