‘மக்களுடன் முதல்வர்’ முகாமில் அமைச்சருக்கு ரத்த அழுத்தப் பரிசோதனை

0 390
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 6  மணப்பாறை அருகே மக்களுடன் முதல்வர் முகாமில் அமைச்சர் கோவி.செழியன் தூய்மைப் பணியாளர்களுடன் உணவருந்தினார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குபட்ட 4 இடங்களில் தமிழக முதல்வரின் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் மருத்துவ முகாம் உள்ளிட்ட முகாம்களும் இடைபெற்றிருந்தது. இந்த முகாம்களில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

பின்னர் பண்ணபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில்நடைபெற்ற முகாமில் கலந்து கொண்ட அவர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்து கொண்டார். பின்னர் சுகர் பரிசோதனைக்காக ரத்த பரிசோதனையும் செய்தார். அதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து தூய்மைப் பணியாளர்களுடன் சேர்ந்து மதிய உணவு அருந்தினார்.

Leave A Reply

Your email address will not be published.