முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள்: திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை

0 391
Stalin trichy visit

திருச்சி, டிச. 5 திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு  நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில்  மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் எம்பியுமான ப.குமார் தலைமையில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் மரியாதை செலுத்தி வழங்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்கம் ஏற்பாட்டில், துவாக்குடி டாஸ்மாக் மண்டல குடோன் முன்பு அம்மாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து டாஸ்மார்க் சுமை பணி தொழிலாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
அதேபோல் துவாக்குடி அண்ணா வளைவில் நகராட்சி வார்டு கவுன்சிலர் சாருமதி மற்றும் ஐடிவிங் நிர்வாகி மலைச்சாமி ஏற்பாட்டில், அங்கு அம்மாவின் திருவுருவ படத்திற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார் மலர் தூவி மரியாதை செய்தார் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களையும், பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினார்.
இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் எஸ் எஸ் ராவணன், எஸ் கே டி கார்த்தி, நகர செயலாளர் பாண்டியன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் சுபத்ரா தேவி, வர்த்தக அணி நிர்வாகி ராஜா மணிகண்டன், கலை பிரிவு நிர்வாகி ராஜா, ஐ டிவி நிர்வாகிகள் சுரேஷ், பிரசன்னா, கோபிநாத், மற்றும் அதிமுக நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், அண்ணா டாஸ்மாக் சுமைப்பணி தொழிற் சங்க நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.