கலைஞரின் 99வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் மாலை அணிவித்து மரியாதை

0 259
Stalin trichy visit

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா
திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் 99 பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி  கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினர் அதனைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
தெற்கு மாவட்டத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லங்கள் சிறார் இல்லங்கள் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தேவையான உபகரணம் பொருட்களையும் அன்பில் அறக்கட்டளையின் மூலம் கல்வி நிதி மற்றும் மருத்துவம் உதவித் தொகையும் காசோலை மூலம் வழங்கப்பட்டது
இதனைத் தொடர்ந்து திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் அமைந்துள்ள தலைவர் கலைஞர் அவர்களின் முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.கே.என்.சேகரன் என் கோவிந்தராஜன் வண்ணை அரங்கநாதன் கவிஞர் சல்மா ‌ செந்தில்  பகுதி கழக செயலாளர்கள் மு.மதிவாணன்
இ எம் தர்மராஜ் நீலமேகம் மோகன்
டிபி எஸ் எஸ் ராஜ்முகமத் மணிவேல் அவர்களும், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் கே.எஸ்.எம்.கருணாநிதி அவர்களும், மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பயனாளிகள் பெரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்

Leave A Reply

Your email address will not be published.