முன்னாள் எம்.பி. அடைக்கலராஜ் பிறந்த நாள் : காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அழைப்பு

0 213
Stalin trichy visit

திருச்சி மே.8 திருச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எல்.அடைக்கலராஜின் 88-வது பிறந்தநாள் விழா நாளை (9-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சி ஜென்னி பிளாசாவில் உள்ள அவரது உருவ சிலைக்கு தொழிலதிபர் ஜோசப்லூயிஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

இது குறித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும்,திருச்சி மாநகராட்சி கவுன்சிலருமான வி.ஜவகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் துணை தலைவரும், திருச்சியில் நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அனைவரிடமும் அன்புடன் பழகி, மக்கள் பணியாற்றி, நம் அனைவரின் மனதிலும் நிலைத்து வாழும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எல்.அடைக்கலராஜ் 88 -ஆம் ஆண்டு பிறந்த நாள் நாளை (9-ந்தேதி) நடைபெறுகிறது. ஜங்ஷன் ஜென்னி பிளாசாவில் அமைந்துள்ள எல்.அடைக்கலராஜின்  உருவ சிலைக்கு காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாக குழு உறுப்பினர் அ.ஜோசப் லூயிஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து நிர்வாகிகள், பெருந்தலைவர் காமராஜர் தொண்டர்கள், நடிகர் திலகம் சிவாஜியின் தொண்டர்கள், எல்.அடைக்கலராஜின் அன்பு உள்ளங்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.