திமுக பிரமுகரை தாக்கியது உள்ளிட்ட மூன்று வழக்குகளில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.மேலும் திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் கையெழுத்திட உத்தரவு பிறப்பித்திருந்தது – இந்நிலையில் கடந்த வாரம் முதலே திருச்சியில் தங்கி கையெழுத்திட்டு வரும் ஜெயக்குமார் தற்போது கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்.கையெழுத்திட கடந்த வாரம் வந்த போது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கூடியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு இருந்தது – இதனை அடுத்து ஜெயக்குமாருடன் ஒரு சிலர் மட்டுமே காவல் நிலையத்திற்குள் வர வேண்டும் என்று நிபந்தனை வழங்கப்பட்டது.இதில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் அறிக்கையில் இல்லாத வாக்குறிதிகளை கூட நாங்கள் நிறைவேற்றினோம்.திமுக அரசிடம் மக்கள் மாதம் 1000 ரூபாய் எதிர்பார்க்கின்றனர் – தேர்தல் வாக்குறுதியில் கூறியதை திமுக அரசு ஏன் நிறைவேற்றவில்லை.பெட்ரோல்,டீசல் விலையை பொருத்த வரை நிதி தன்னாட்சி பாதிக்கப்படும் என்பதால் நாங்கள் அதை ஜி எஸ் டிக்குள் கொண்டு வரவில்லை,டி.ஆர் பாலு கூறுகிறார் பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர வேண்டும் என்று,கேட்டால் கட்சி ரீதியாக சொன்னோம் என்கிறார். கட்சி ரீதியாக ஜி.எஸ்.டிகுள் கொண்டு வர வேண்டும் என்கிறார்கள் – ஆட்சி ரீதியாக ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வரக் கூடாது என்கிறார்கள்,
முரண்பாடுகளின் மொத்த உருவமாக திமுக உள்ளது – கட்சி வேறு,ஆட்சி வேறு என்கிற அளவில் செயல்பட்டு வருகிறார்கள்.ஆறுமுகசாமி ஆணையத்தில் நேற்று ஓ. பன்னீர்செல்வம் சின்னம்மா மீது மதிப்பும் மரியாதையும் உள்ளது என்று கூறியது குறித்த கேள்விக்கு ? ஆறுமுகசாமி ஆணையம் ஏறத்தாழ முழுமையாக விசாரணையை நடத்தி முடித்து வருகிறது – இது குறித்து நான் கருத்து கூறினால் என்னையும் ஆணையம் அழைத்து சம்மன் செய்து விசாரணை செய்வார்கள், இந்த நேரத்தில் நான் இது குறித்து எதுவும் கூற முன் வரவில்லை.