அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் எம்.பி. குமார் வாக்குசேகரிப்பு

0 180
Stalin trichy visit

திருச்சி, ஏப்.1  திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அருகே சட்டமன்ற தொகுதியில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து அதிமுக நிர்வாகிகளுடன் வீடு வீடாக சென்று தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்த முன்னால் எம்.பி ப.குமார்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக,தேமுதிக,எஸ்டிபிஐ ,புதிய தமிழகம் உள்ளிட்ட தோழமை கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்திரமோகனுக்கு வாக்குகள் சேகரிக்க திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னால் எம்பியுமான ப.குமார் அதிமுக நிர்வாகிகளுடன் லால்குடி சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பிராச்சாரம் செய்து வீடு,வீடாக சென்று இரட்டை இலை சின்னம் ஸ்டிக்கர் ஒட்டி பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளிக்க வேண்டும் என வாக்குகள் சேகரித்தார். இந்த வாக்கு சேகரிப்பில் லால்குடி வடக்கு,தெற்கு ஒன்றிய செயலாளர்கள் அசோகன்,சூப்பர் நடேசன், புள்ளம்பாடி வடக்கு,தெற்கு ஒன்றிய செயலாளர்கள் ராஜாராம்,டி.என்.சிவக்குமார்,லால்குடி நகர செயலாளர் பொன்னி சேகர், இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் வி. டி. எம். அருண்நேரு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார் நகர தகவல் பிரிவு செயலாளர், நிர்வாகிகள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்து வாக்கு சேகரித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.