திருச்சி அருகே அரசு பேருந்து மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம்!
திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே சிலையாத்தி பகுதியில் உள்ள திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் கணவன், மனைவி, இரு குழந்தைகள் 4 பேர் சென்ற போது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

திருச்சி சிந்தாமணியிலிருந்து கரியமாணிக்கம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்விற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற மணிகண்டன், இவரது மனைவி மலர்விழி மகன் தர்ஷன் மகள் தர்ஷினி 4 ஆகியோர் மீது சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியதில் மேற்படி இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நான்கு நபர்களும் படுகாயமடைந்து சிகிச்சைகாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8