காந்தியடிகள் நினைவு நாள் : அமைச்சர் மகேஸ் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, ஜன.30 தேசத் தந்தை காந்தியடிகள் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் அன்பில்மகேஸ் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருச்சி திருவெறும்பூர் பெரிய சூரியூர் கிராமத்தில் அமைந்திருந்த காந்தி
சிலை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவரது சொந்த நிதியிலிருந்து புதுப்பிக்கப்பட்டது. காந்தியடிகள்நினைவு நாளான இன்று காந்தியடிகள் சிலை திறந்து வைக்கப்பட்டு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.