புள்ளம்பாடி ரயில் நிலையம் அருகே கேட் கீப்பர் சடலமாக மீட்பு
புள்ளம்பாடி ரயில் நிலையம் அருகே கேட் கீப்பர் சடலமாக மீட்பு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ரயில் நிலையம் அருகே உள்ள பழைய பிளாட்பாரத்தில் புள்ளம்பாடி ரயில் நிலையத்தில் பணியாற்றி வந்த கேட் கீப்பர் சடலமாக மீட்பு.
லால்குடி அருகே சேச சமுத்திரம் மேலவாலை பகுதியைச் சேர்ந்தவர் 48 வயதான கதிர்வேல். இவர் புள்ளம்பாடி ரயில் நிலையத்தில் கேட் கீப்பராக பணியாற்றி வந்தார். கடந்த 2 ம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்க்கு செல்லாமல் வேறு பணிகளை செய்து வந்த்தாக கூறப்படுகிறது. அவரது குடும்பத்தினர் அவரை செல்போனில் தொடர்பு கொண்ட போது செல் போன் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை புள்ளம்பாடி ரயில் நிலையம் அருகே பழைய பிளாட்பாரத்தில் உள்ள பெஞ்சில் படுத்து கதிர்வேல் கிடந்துள்ளார். இது குறித்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.. தகவலறிந்த அவரது குடும்பத்தார் வந்து பார்த்தபோது அவர் மர்ம்மான முறையில் சடலமாக கிடந்து தெரியவந்தது.
இது குறித்து கல்லக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த கல்லக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கல்லக்குடி போலீசார் அவரின் இறப்பு குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.