இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

0 223
Stalin trichy visit

திருச்சி, பிப். 4  திருச்சி மாவட்டம் லால்குடி ஜே. ஜே. நகர் பகுதியில் மன உளைச்சலில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

லால்குடி சிறுதையூர், பாரதிநகர், ஜே ஜே நகரை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி 25 வயதான மீனாட்சி. இவர்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்் இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளது. கணவர் விக்னேஷ் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது் இதனால் மனைவி மீனாட்சி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் சேலையால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்் பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் திருமணம் ஆகி இரண்டு வருடங்களே ஆனதால் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்து வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.