இருசக்கர வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழப்பு
திருச்சி, பிப். 4 மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் நடந்து சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் முதியவர் பலி.
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிகை பட்டினத்தைச் சேர்ந்தவர் சேகர் (60). இவர் விறகு வெட்டும் கூலிதொழிலாளி. இவர் நேற்று திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது கருமலையைச் சேர்ந்த மதுசூதனன் என்பவர் அவரது இரு சக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்த தில் எதிர்பாராத விதமாக நடந்து சென்ற முதியவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.
இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.