அதிவேகமாக சென்ற பைக் மோதியதில் 5 பேர் படுகாயம்

0 357
Stalin trichy visit

திருச்சி, ஜன.5  திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே அகிலாண்டபுரத்தில் உள்ள திருச்சி -சிதம்பரம் நெடுஞ்சாலையில் கட்டுபாட்டை இழந்து சாலையில் சீறி பாய்ந்த மோட்டார் பைக் மோதிய விபத்தில் 3 வயது குழந்தை இரண்டு பெண்கள் உள்ளிட்ட 5 பேர் படுகாயம் – சமயபுரம் நம்பர் 1 டோல்கேட்டில் இருந்து அரியலூர், ஜெயங்கொண்டம்,சிதம்பரம் வரை உள்ள சாலை பல்வேறு கிராமங்களுக்குச் செல்லும் பிரதான சாலை என்பதால் எப்பொழுதும் வாகன போக்குவரத்து அதிக அளவில் காணப்படுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில தினத்தன்று திருச்சி – சிதம்பரம் நெடுஞ்சாலையில் உள்ள அகிலாண்டபுரம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஜெயராணி (அவரது பேரக்குழந்தை 3 வயதான இனியன் மற்றும் அவரது வீட்டின் அருகே வசிக்கும் 67. வயதான ராஜேஸ்வரி ஆகிய மூன்று பேரும் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்கு திருச்சி – சிதம்பரம் நெடுஞ்சாலையின் வலது புறம் நடந்து சென்று கொண்டிருந்தனர்.அதேபோல் அகிலாண்டபுரம் லட்சுமி நகரைச் சேர்ந்த 50 வயதான கிருஷ்ணமூர்த்தி மோட்டார் பைக்கில் முன்னாள் சென்று கொண்டிருந்தார். அப்போது லால்குடி அருகே கீழ அன்பில் பகுதியை சேர்ந்த 20 வயதான சரத்குமார் என்பவர் சாலையின் அதே திசையில் வலது புறத்தில் பல்சர் மோட்டார் பைக்கில் அதிவேகமாக வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.இதில் சரத்குமார் ஓட்டி வந்த மோட்டார் பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது புறத்திலிருந்து வலது புறத்திற்கு அதிக வேகத்துடன் சறுக்கி சென்றது.மேலும் முன்னால் சென்ற மோட்டார் பைக் மீது மோதியதில் இரண்டு வாகனங்களும் நிலைத்தடுமாறு கீழே விழுந்தது.மேலும் கோவிலின் முன்பகுதியில் சாலை ஓரத்தில் இருந்த கிணற்றின் சுவர் மீது மோதியது. இதில் சரத்குமார் ஓட்டி வந்த மீட்டர் பைக் சினிமா பட சண்டை காட்சியில் பறந்து செல்வது போல் பறந்து சென்று சாலை ஓரத்தில் நடந்து சென்ற ஜெயராணி ,ராஜேஸ்வரி, இனியன் ஆகிய மூன்று பேர் மீது பலமாக மோதியது. இந்த சரத்குமார்,கிருஷ்ணமூர்த்தி,3 வயது குழந்தை உட்பட உள்ளிட்ட விபத்தில் ஐந்து பேரும் படுகாயம் அடைந்தனர். இதை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இ்ந்த விபத்து குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே விபத்தில் மோட்டார் பைக் மீதும்,நடந்து செல்போர் மீதும் பறந்து சென்று மோதி விபத்தை ஏற்படுத்திய பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.