எஸ்.ஆர்.எம்.கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

0 209
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 24  எஸ்.ஆர்.எம்.கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 302 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் இருங்களூரில் உள்ள திருச்சி எஸ்.ஆர்.எம் கல்வி வளாகத்தில் நேற்று எஸ்.ஆர்.எம்.கலை அறிவியல் கல்லூரியின் 4வது பட்டமளிப்பு விழா எஸ்.ஆர்.எம் திருச்சி & ராமாபுரம் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ஆர்.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி கல்வி இணை இயக்குநர் டாக்டர் ஆர். ராவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து 302 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.ஜி.செந்தில்குமார், பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.