தென்மாநில முதல்வர்கள் கூட்டம் வரலாற்று சிறப்பு மிக்கது : முன்னாள் எம்பி. திருநாவுக்கரசர் பேட்டி

0 324
Stalin trichy visit

திருச்சி மார்ச் 24 தென்மாநில முதல்வர்கள் கூட்டம் வரலாற்று சிறப்பு மிக்கது. முன்னாள் எம்பி. திருநாவுக்கரசர் பேட்டி

இஸ்லாமியரின் உயர்ந்த மாதமாகவும், சிறப்புக்குரிய மாதமாக கருதப்படுவது ரம்ஜான் மாதமாகும், இந்த பண்டிகை முன்னிட்டு உணவு உண்ணாமலும், தண்ணீர் அருந்தாமலும் 40 நாள் நோன்பு இருந்து வருகின்றனர்.

மேலும், சமுக நல்லிக்கணத்தை பேற்றும் வகையில் அனைத்து இந்து, கிறிஸ்தவர்கள் என சாதி, மத, போதமின்றி கலந்து கொண்டு அன்பை வெளிப்படுத்தும் விதமாக நோம்பு திறக்கும் நிகழ்வு அனைத்து இஸ்லாமியர் அமைப்பினரும் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்நிகழ்வில் தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், கட்சியினர் மற்றும் இஸ்லாமிய பெருமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருநாவுக்கரசர் தமிழக முதல்வர் இன்று தென் மாநிலங்கள் இருக்கின்ற முதல்வர்கள் மற்றும் மற்ற கட்சியின் தலைவர்களை அழைத்து வரலாற்று சிறப்புமிக்க ஒரு கூட்டத்தை சென்னையில் நடத்தியுள்ளார். பாராளுமன்ற தொகுதி உடைய விரிவாக்கம் அல்லது தொகுதி வரையறை செய்யும் பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. பாராளுமன்றத்தில் அரசின் சார்பில் இதுவரை பிரதமரோ, உள்துறை அமைச்சரோ அரசு ஆணையாகவோ அரசு உத்தரவாதமாகவோ சொல்லாத நிலையில் ஏற்கனவே இருக்கின்ற பாராளுமன்ற எண்ணிக்கை குறைந்து போகும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

மக்கள் தொகை கட்டுப்படுத்தி அரசியல் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தியதற்காக தண்டிக்கப்படுவதை போல தொகுதி இல்லை எண்ணிக்கை குறைக்கப்படலாம் வருகிற செய்திகள் ஆபத்தானவை, கண்டனத்துக்குரியது.

தமிழகத்தின் எண்ணிக்கை குறையக்கூடாது. குறையக்கூடாது என்ற உத்தரவாதம் மட்டுமல்ல வடநாட்டில் பிகாரிலோ, உத்தரபிரதேசத்திலோ, தொகுதியின் எண்ணிக்கையை உயர்த்தப்பட போவதாக செய்திகள் வருகிறது. அப்படி வடநாட்டுடைய எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுது தமிழகத்தில் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும். ஏற்கனவே இருந்த தொகுதியும் பறிபோய் உள்ளது. சுதந்திரத்துக்கு முன்பாக புதுக்கோட்டை தனி நாடாக இருந்தது. சுதந்திரத்திற்கு பின்னர் தான் இந்தியாவிற்குள் அது சேர்க்கப்பட்டது. 1952ல் இருந்து தனி நாடாளுமன்ற தொகுதியாக இருந்தது. பின்னர் தொகுதி வரையறும் போது அது மாற்றப்பட்டுவிட்டது. புதுக்கோட்டையை புதிய நாடாளுமன்ற தொகுதியாக உருவாக்கபட வேண்டும்.

தொடர்ந்து மாநில முதல்வருடன் கலந்து ஆலோசித்து மத்திய அரசுக்கு அழுத்தம் தர இந்த கூட்டத்தை முதல்வர் கூட்டி இருப்பது பாராட்டுக்குரியது. முறையான தொகுதி சீரமைப்பு நடைபெறும் என்று நம்புகிறேன்.

இந்த பட்ஜெட் சிறப்பான பட்ஜெட் ஆக உள்ளது. குழந்தைகள், மகளிர் நலம், சுகாதாரம் மகளிர் நலம் காக்கும் பட்ஜெட் ஆக உள்ளது. குறிப்பாக ரூ. 1800 கோடியில் புதுக்கோட்டை, அறந்தாங்கி நகர முழுவதற்கும் கூட்டு குடிநீர் திட்டம் 600 கிராமங்களுக்கு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பல்வேறு பிரச்சனை மறைப்பதற்காக தொகுதி வரையறை பிரச்சினையை திமுக கையெடுத்துள்ளது என்ற அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார் என்ற கேள்விக்கு

அண்ணாமலை சொல்வதில் எந்தவிதமான லாஜிக்கும், தர்கா ரீதியா கூட அந்த வாதம் சரியாக இல்லை. தமிழகத்தில் பிரச்சனைகளை மூடி மறைப்பதற்காக இந்த கூட்டத்தை கூட்டியிருப்பார் என்றாலும் மற்ற மாநிலத்தில் உள்ள முதல்வர்களுக்கு வேலை இல்லாமல் இருக்கிறார்களா.
அனைவரும் திமுகவை சேர்ந்தவர்களா. விருந்து சாப்பிடுவதற்காக வரவில்லை. மத்திய அரசு எந்தவிதமான உத்தரவாதமும் தரவில்லை.

மத்திய ஆட்சியில் இருக்கக்கூடிய மாநில தலைவராக அண்ணாமலை உள்ளார். அமைச்சர்களிடம் உத்தரவு பெற்று வழங்கட்டும். கூட்டத்தைக் குறித்து விமர்சனம் செய்வது அவரது கையாலாக தனத்தை காட்டுகிறது என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.