மாடக்குடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்

0 199
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டாரம் மாடக்குடி ஊராட்சியில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி தலைமையில் 02.10.23 நடைபெற்றது. துணைத்தலைவர் கலைச்செல்வி மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். திருச்சி மாவட்ட குழந்தை நல குழு உறுப்பினர் முனைவர் பிரபு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் பொது மக்களின் பங்கு என்ற தலைப்பில் குழந்தை திருமண தடைச் சட்டம் குழந்தை தொழிலாளர் ஒழிப்புச் சட்டம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் மற்றும் சட்ட விரோதமாக குழந்தைகளை விற்றல் குறித்தும் குழந்தைகள் உதவி மைய எண் 1098 குறித்து விழிப்புணர்வு வழங்கினர்.கூட்டத்தில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி ஊராட்சி ஒன்றிய பார்வையாளர் சைமன் ஆரோக்கியராஜ் கிராம சுகாதார செவிலியர் சந்தோஷமேரி ஆகியோர் கலந்துகொண்டு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பேசினார்கள்.
கூட்டத்தில் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.