பி.கே. அகரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

0 265
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே பி.கே. அகரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பூமணி பாலசுப்பிரமணி தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரசு அலுவலர்கள் ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் பொதுமக்கள் இளைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதலில் கிராம ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் வரவு செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சியாக அறிவிக்கப்பட்ட ஊராட்சிகளில் கட்டப்பட்ட தனிநபர் இல்ல கழிப்பறைகளை தொடர்ந்து பயன்படுத்தாத நபர்களின் பெயர்களை கிராம சபையில் வாசித்தல் மற்றும் அவர்களை கிராம சுகாதார நலன் மற்றும் குழந்தைகளின் நலன் கருதி கழிப்பறையை பயன்படுத்த வலியுறுத்துதல்

கிராம ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கழிப்பறை வசதிகள் இருத்தல் பொது இடங்களில் நெகிழி குவிக்கப்படாமல் இருத்தல், திட மற்றும் திரவ கழிவுகள் வெளியேற்ற போதிய இடவசதி மற்றும் திறந்தவெளியில் மலம் கழித்தல் குறித்த விழிப்புணர்வு பதிவுகள் நிரந்தரமாக அரசு கட்டிடத்தில் காட்சிப்படுத்துதல் ஆகியவற்றை கடைபிடிக்கும் ஊராட்சிகளை முன்மாதிரி கிராம்ம் என உறுதி செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும், மற்றும் மற்ற நிலையில் உள்ள கிராம ஊராட்சிகளில் திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சியாக ஏற்கனவே அறிவித்ததை தொடர்ந்து அந்நிலையை தக்க வைப்பது குறித்து உறுதிமொழி எடுக்க வேண்டும்.
.
ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் கிராம குடிநீர் உட்கடமைப்பு பணிகளுக்கு 10% சமூக பங்களிப்பினை வழங்குவதன் மூலம் கிராம ஊராட்சியின் குடிநீர் விநியோக பணிகளில் அனைவரும் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலாளர் இளையராஜா, அரசு பள்ளி ஆசிரியர் லூக்காஸ், மக்கள் நல பணியாளர் ராஜ்குமார் மகளிர் சுய உதவி குழுவினர், கிராம பொதுமக்கள் இளைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.