திருச்சி மாவட்டம், வளநாடு அருகே உள்ள கீழபளுவஞ்சியைச் சேர்ந்தவர் பழனியம்மாள்(75). இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நடப்பதற்கு கூட சிரமமான நிலை இருந்ததால் மனமுடைந்த காணப்பட்டார். இதற்கிடையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து வளநாடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதுமையினால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மனமுடைந்த மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.