காந்தி மார்க்கெட் அருகே பழமையான கட்டிடம் இடிந்து விழுந்ததில் மூதாட்டி காயம்!

0 487
Stalin trichy visit

திருச்சி தாராநல்லூர் வாழைக்காய் மண்டி கிருஷ்ணாபுரம் மெயின் ரோட்டில் 60 ஆண்டு கால பழமையான அடுக்குமாடி கட்டிடம் உள்ளது இந்த கட்டிடத்தில் 22 வீடுகள் உள்ள நிலையில் 8 வீடுகளில் மட்டும் சுமார் 30க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக திருச்சியில் பெய்து வரும் கனமழை காரணமாக கட்டிடத்தின் பால்கனிகள் வலுவிழந்து நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது இதில் வீட்டு வாசலில் அமர்ந்து இருந்த மூதாட்டி பெரியநாயகி என்பவர் படுகாயமடைந்தார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் மூதாட்டியை மீட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து திருச்சி காந்தி மார்க்கெட் காவல்துறையினருக்கு தகவல் அறிவிக்கப்பட்டு சம்பவம் இடம் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் அதேபோல் மாநகராட்சி அதிகாரிகளும் இடிந்து விழுந்த கட்டிடம் குறித்து ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.