முசிறி அங்காளம்மன் கோயிலில் மாசி மாத சிவராத்திரி உற்சவ திருவிழா
திருச்சி, பிப். 18 முசிறி அங்காளம்மன் கோயிலில் மாசி மாத சிவராத்திரி உற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்டம் முசிறியில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.கோயிலில் மாசி மாத சிவராத்திரி முன்னிட்டு தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது.விழாவை முன்னிட்டு தீர்த்த குடம் எடுத்து வருதல், காப்பு கட்டுதல்,யாக வேள்வி,சுவாமி புறப்பாடு உள்ளிட் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் திருத்தேர் உற்சவம் நடைபெற்றது.சுவாமி அங்காளம்மன் திருத்தேரில் எழுந்தருளி தாரை தப்பட்டைகள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது பக்தர்கள் தேங்காய் பழம் படைத்து அங்காளம்மனை வழிபட்டனர்.