சிலிண்டர் வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு!

0 747
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி சந்தைப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் சிக்கந்தர்(49). இவர் வீட்டில் சமையல் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது. சிலிண்டர் மூலம் சமையல் எண்ணென் ஊற்றி சமையல் செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென சமையல் எண்ணெயில் சட்டிக்கு மேல் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இதைப்பார்த்த குடும்பத்தினர் தீயை அணைக்க முயன்ற நிலையில் தீ மளமளவென பரவி சிலிண்டருக்கும், கேஸ் அடுப்பிற்கும் செல்லும் குழாயில் தீ பரவத்தொடங்கியது. உடனே இதுபற்றி துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு தறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஒரு சிலிண்டர் வெடித்து சிதறியது.

பயங்கர சப்தம் ஏற்பட்ட நிலையில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் அதிக அளவிலான மக்கள் அந்த பகுதியில் திரண்டனர். இருப்பினும் தீயணைப்பு துறையினர் வீட்டிற்குள் சென்றபோது மற்றொரு சிலிண்டர் முழுவதுமாக எரிவாயு நிரப்பிய நிலையில் இருந்தது. உடனே அந்த சிலிண்டரை தீயணைப்பு துறையினர் அப்புறப்படுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

 

இருப்பினும் ஒரு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு அதிக அளவில் சேதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில்யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.