பசுமை சாதனையாளர் விருது
திருச்சி, ஜுன்12 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், காட்டுப்புத்தூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா மற்றும் சனமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா ஆகியோருக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் சுற்றுசூழல் பாதுகாத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வரும் பசுமை சாதனையாளர் விருதினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வழங்கி பாராட்டினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சிவரஞ்சனி உள்பட பலர் உள்ளனர்.