ஏ.பி.வி.பி. முசிறி நகர பயிற்சி முகாம்
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் ( ABVP )
தேசிய மாணவர் அமைப்பு முசிறி நகர கிளை சார்பாக நேற்று 11/06/2023, ஞாயிற்றுக்கிழமை திருஈங்கோய்மலை ஸ்ரீ லலிதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ABVP நகர பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் சுமார் 50- க்கும் மேற்பட்ட மாணவத் தலைவர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி முகாமில் மாணவர் ஹரிகிருஷ்ணா வரவேற்புரை ஆற்றினார். பள்ளியின் தாளாளர் ஸ்ரீ. யோகினி சிவசங்கரி யம்பா அவர்கள் ஆசியுரை வழங்கினார்கள். ஸ்ரீ. அருள் வேல் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.ABVP அறிமுகம் மற்றும் சாதனை குறித்து ABVP தென் தமிழக மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீ. விஜயராகவன் அவர்கள் உரையாற்றினார். போதை பழக்கம் இல்லா மாணவ சமுதாயம் என்பது குறித்து ABVP தென் தமிழக மாநில துணை தலைவர் முனைவர். கார்த்திகேயன் அவர்கள் உரையாற்றினார். பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சியாக இந்த ஆண்டிற்கான முசிறி நகர பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். ABVP முசிறி நகர தலைவராக திருமதி. சரோஜினி அவர்களும் நகர ஒருங்கிணைப்பாளராக ஸ்ரீ. ஹரி கிருஷ்ணா அவர்களும் மற்றும் நகர செயலாளராக ஸ்ரீ. சீனிவாசன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.