லால்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

0 396
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருவாய் கோட்டாச்சியர் வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது.

லால்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள், விவசாய சங்கத்தினர் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர்.மேலும்
லால்குடியில் பயிற்சி பெற்று வரும் தஞ்சை மாவட்ட வேளாண் கல்லூரி மாணவிகள் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். வருவாய் கோட்டாச்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் லால்குடி வட்டாச்சியர் செசிலினா சுகந்தி,மண்ணச்சநல்லூர் வட்டாச்சியர் சக்தி முருகன் குழளுர் மற்றும் தஞ்சை கல்லூரி முதல்வர்கள் ,அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.