கல்லக்குடியில் புதிய பஞ்சாப் நேஷனல் வங்கி திறப்பு விழா
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடியில் மேம்படுத்தப்பட்ட Made in India 2023 புதிய பஞ்சாப் நேஷனல் வங்கி திறப்புவிழா நடைபெற்றது.
டால்மியாபுரத்தில் இயங்கிவந்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி தற்போது கல்லக்குடி சவேரியார் திருமண மண்டபம் அருகில் புதிய இடத்தில் அமைந்துள்ள மேம்படுத்தப்பட்ட Made in India 2023 புதிய பஞ்சாப் நேஷனல் வங்கியின் புதிய கிளை திறப்புவிழா திருச்சி வட்டத் தலைவர் ராம் மோமன் தலைமையில் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.பின்னர் குத்து விளக்கேற்றி தொடங்கி் ஙைத்தனர்.
தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட Made in India 2023 புதிய பஞ்சாப் நேஷனல் வங்கியில் பண பரிவர்தனை சேவையை தொடங்கியது. வாடிக்கையாளர்களும், பொதுமக்களும், தொடர்ந்து ஆதரவு தருமாறு வங்கி சார்பில் கேட்டுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேலாளர் அலுவலகப் பணியாளர்கள் வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.