குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி மாணவர்களுக்கு நாளை பாராட்டு விழா

0 60
National

திருச்சி ராம்ஜி நகர், கே. கள்ளிக்குடியில் என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி அமைந்துள்ளது. இங்கு மத்திய மாநில அரசு பதவிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி மையத்தில் பயின்ற 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்.,ஐ.ஆர்.எஸ்.தேர்வுகளில் வெற்றி பெற்று பணியாற்றி வருகிறார்கள். சமீபத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்விலும் என்.ஆர்.ஐ.ஏ. எஸ்.அகாடமி மாணவர்கள் டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்வாகினர். இதை எடுத்து அந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் குரூப்-1 வெற்றி விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு ஆர். விஜயாலயன் தலைமை தாங்கி பாராட்டி பேசுகிறார். மேலும் டி.எஸ்.பி. பதவிக்கு தேர்வு பெற்ற முசிறி காயத்ரி, சிந்து உள்ளிட்ட மாணவர்கள், அவர்கள் தம் பெற்றோர்கள் உரையாற்றுகிறார்கள். இதில் தற்போது பயிற்சி பெற்று வரும் மாணவ- மாணவிகள் திரளாக பங்கேற்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!