அமிர்த வித்யாலயம் பள்ளியில் குரு பூர்ணிமா நிகழ்ச்சி
திருச்சி, ஜுன்27 திருச்சி அமிர்த வித்யாலயம் பள்ளியில் குரு பூர்ணிமா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வியாசர் பகவானின் பிறந்த தினத்தை குரு பூர்ணிமா நிகழ்ச்சியாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பெற்றோரை மதித்தல் ஆசிரியர்களை மதித்தல் தேசத்தை நேசித்தல் போன்ற நல்ல குணங்களை மாணவர்கள் மனதில் ஏற்படுத்தும் விதமாக இன்று இப்பள்ளியில் குரு பூர்ணிமா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 1000 மாணவர்களுக்கு மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தையுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பெற்றோர்கள். இந்த நிகழ்ச்சியை மாதா அமிர்தானந்தமை மடத்தின் துறவி அஜயா மிருதா துவக்கி வைத்து மாணவர்களுக்கு குரு பூர்ணிமாவின் சிறப்புகளையும் பெருமைகளையும் எடுத்துக் கூறினார். பள்ளித் தலைமை ஆசிரியை உஷாராராகவன் அவர்கள் விளக்கேற்றி துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ஆசிரியர் பெருமக்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்